tamilnadu

img

அறிவியல் இயக்கம் சார்பில் சூரியகிரகணம் குறித்த விழிப்புணர்வு

 சேலம்,டிச.11-   தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங் கலம் கிளை சார்பாக டிசம்பர் 26 அன்று நிகழவிருக்கும் வளைய சூரிய கிரகணம் பற் றிய பயிற்சி கூட்டம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம்  தாரமங்கலம் நைஸ் கிட்ஸ் காலேஜ் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ராஜேந்திர சோழன் தலைமை வகித்தார். இந்த பயிற்சி முகா மிற்கு   பள்ளியின் முதல்வர் சீனிவாசகர் முன் னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக வானியல் மாநில கருத்தாளர் ஜெயமுருகன் கலந்துகொண்டு இந்த அரிய சூரிய கிர கணம் நிகழ்வு பற்றி  மாணவர்களிடம் அறிவி யல் பூர்வமாக எடுத்துரைத்தார். குறிப்பாக, கிரணகத்தின்போது, கர்ப்பிணி பெண்கள் வெளியே சென் றால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து, அசைவ உணவுகள் உண்ண கூடாது போன்ற தவறான நம்பிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினார். அதேநேரம்,சூரிய கிரகணம் நாளன்று சூரியனை பாதுகாப்பான முறையில் பார்க்க வேண்டும். அதற்காக உரிய பாதுகாப்பு கண் ணாடியை பயன்படுத்தி பார்க்க வேண்டும், என்பதையும் விளக்கி காண்பித்தார்.  முடி வில், அறிவியல் இயக்க வட்டார பொரு ளாளர் அருள்பிரகாஷ் வந்திருந்த அனைவ ருக்கும் நன்றி கூறினார்.